மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

ராமேஸ்வரத்தில் மாயமான ஒன்பது கொரோனா நோயாளிகள்!

ராமேஸ்வரத்தில் மாயமான ஒன்பது கொரோனா நோயாளிகள்!

தமிழகத்தில் ராமேஸ்வரம், பாம்பன் பகுதி சாலைகளில் தேவையின்றி சுற்றிய 82 பேரை மடக்கிய போலீஸார் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன. அதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதில் ஒன்பது பேர் போலி முகவரி கொடுத்து மாயமாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் பலர் இதனை மீறி வீதிகளில் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி எச்சரித்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர். ஆனாலும் வாகனங்களில் திரிவோர் குறைந்தபாடில்லை.

இதைத் தொடர்ந்து தேவையின்றி சுற்றி திரிபவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் முறையை கொண்டு வந்தனர். அதன்படி ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் சுற்றி திரிந்தவர்களை போலீஸார் மடக்கி பிடித்தனர். அவர்கள் மருத்துவ காரணங்களை கூறியும், தடுப்பூசி போட செல்வதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இருப்பினும் சாலைகளில் தேவையின்றி சுற்றிய 82 பேரை மடக்கிய போலீஸார் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.

இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தபோது அதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

இதற்காக சுகாதாரத்துறையினருடன் பாதிப்புக்குள்ளானவர்கள் கொடுத்த முகவரிக்கு சென்றபோது, அதில் ஒன்பது பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் போலி முகவரி கொடுத்திருப்பது தெரியவர போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்ட ஒன்பது பேர் தற்போது எங்கு உள்ளார்கள்... அவர்களால் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ... என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீஸாரும், சுகாதாரத்துறையினரும் தொற்று பாதிப்புக்குள்ளான ஒன்பது பேரையும் தேடி வருகின்றனர்.

-ராஜ்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வெள்ளி 4 ஜுன் 2021