மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

ஒலிம்பிக்: 10,000 தன்னார்வலர்கள் விலகல்!

ஒலிம்பிக்: 10,000 தன்னார்வலர்கள் விலகல்!

ஜப்பானில் தொடரும் கொரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உதவும் பணியில் ஈடுபட்டுள்ள 10,000 தன்னார்வலர்கள் விலகியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பானில் வரும் ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உதவும் பணியில் ஈடுபட்டுள்ள 10,000 தன்னார்வலர்கள் விலகியுள்ளனர். அவர்கள் விலகியதற்கு கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம் என போட்டி அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

கடுமையான சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் விளையாட்டுகளை நடத்துவதாக ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் உறுதியளித்துள்ளன. எனினும், பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன. தன்னார்வலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா என்றும் தெரியவில்லை.

கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருந்த நிலையில், ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதும், பல தன்னார்வலர்கள் விலகியதற்கு மற்றொரு காரணம் என அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்பதே பலரின் சந்தேகமாக உள்ளது.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 4 ஜுன் 2021