மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு கொரோனா!

வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு கொரோனா!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 4 ஆண் சிங்கங்கள் மற்றும் 4 பெண் சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிங்கங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த சிங்கங்கள் அனைத்தும் குணமடைந்ததாக நேரு விலங்கியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசியின்மை மற்றும் சளித் தொந்தரவு இருந்ததைத் தொடர்ந்து அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. கடந்த 3ஆம் தேதி இறந்த 9 வயதுள்ள மீனா பெண் சிங்கமும் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்திருக்கும் பெண் சிங்கத்தின் இரண்டாவது கொரோனா சோதனை முடிவுகள் வரவிருக்கிறது. இணை நோய்கள் காரணமாகவும் அது இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 26ஆம் தேதி முதல்,வண்டலூர் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டு, பூங்கா பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதனால், பணியாளர்கள் மூலம் விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவியிருக்குமோ என்று வண்டலூர் பூங்கா நிர்வாகிகள் விசாரணை நடத்துகின்றனர்.

தற்போது, விலங்குகளை தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற விலங்குகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக பூங்கா நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருகிற நிலையில்,பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 4 ஜுன் 2021