மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளிவைப்பு!

ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளிவைப்பு!

பாலியல் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள ராஜகோபாலனின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜூன் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த ராஜகோபாலனை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி அசோக் நகர் மகளிர் காவல் நிலைய போலீசார், 5 மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகள் என 250 கேள்விகள் தயாரிக்கப்பட்டு அதற்குப் பதில் அளிக்கும்படி ராஜகோபாலனிடம் விசாரித்துள்ளனர்.

ராஜகோபாலனிடம் மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்டது, அரைகுறை ஆடையோடு ஆன்லைன் வகுப்பு நடத்தியது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளின் புகைப்படங்களை ஜூம் செய்து, ஆபாசமாக படம் எடுத்து ரசித்து வந்ததும், மாணவிகளின் போட்டோக்களை மார்பிங் செய்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், மதிப்பெண்களை அதிகமாக போடுவதாக கூறி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராஜகோபாலனிடம் நடத்திய விசாரணைகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகோபாலன் அளித்துள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில், ராஜகோபாலன் செய்துள்ள பலவித தகாத செயல்கள், மாணவிகளுக்கு அளித்துள்ள தொந்தரவுகள் குறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் மூன்று நாள் நிறைவடைந்துள்ள நிலையில், ராஜகோபாலன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, ராஜகோபாலனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார். இதனால், ராஜகோபாலன் நீதிமன்ற காவலில் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு பக்கம், ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் குறித்து பிஎஸ்பிபி பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரிடம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது பற்றி விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 4 ஜுன் 2021