மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

தடுப்பூசி : கோயம்பேடு வியாபாரிகளுக்கு அறிவுரை!

தடுப்பூசி : கோயம்பேடு வியாபாரிகளுக்கு அறிவுரை!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே கோயம்பேடு காய்கறி சந்தையில் அனுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மார்கெட்டில் மளிகை, காய்கறி, பழம், பூ மொத்த மற்றும் சிறு மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை போல, இந்தாண்டும் கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா பரவி விடக்கூடாது என்பதால், மார்க்கெட்டில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் சுஞ்சொங்கம் ஜடக் சிரு ஆகியோர் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் இன்று(ஜூன் 4) ஆய்வு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ககன் தீப் சிங் பேடி, “கோயம்பேடு மார்க்கெட்டில் இதுவரை 4,800 வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து இருந்து வரும் வியாபாரிகள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம். மார்க்கெட்டில் இன்று தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. தினமும் 500 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால், 20-25 நாட்களில் மார்க்கெட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிடலாம். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே கோயம்பேடு காய்கறி சந்தையில் அனுமதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கழிவறைகள் தண்ணீர் வசதியுடன் சுத்தமாக உள்ளது. இருப்பினும், கூடுதலான வசதிகள் தேவைப்படுவதால் அவற்றையும் விரைவில் செய்யவுள்ளோம். ஞாயிற்றுக்கிழமையும் கோயம்பேடு மார்க்கெட் செயல்படும், மதியத்துக்கு மேல் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும்.

கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டமாக இருப்பதாகவும், முகக்கவசம் அணியாமல் இருப்பதாகவும் புகார் வந்துள்ளது. விதிமீறல் குறித்து உயர் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிக்கப்படும். ஒரே நாளில் இது சரியாகாது. தொடர்ந்து பாடம் எடுப்பதை போன்று இவர்களுக்கு தினமும் இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும்.

கோயம்பேட்டில் 1:3 என்ற விகிதத்தில் கடைகள் திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் நோய் பரவலை தடுக்க வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளனர். அவர்களின் ஒத்துழைப்புடன் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மார்க்கெட்டில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மே மாதம் மட்டும் முகக்கவசம் அணியாத 1731 பேர் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாத 699 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மே மாதம் மட்டும் ரூ.1.1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.95 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வெள்ளி 4 ஜுன் 2021