மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கைக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டம் இன்று(ஜூன் 4) டெல்லியில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய ஆளுநர் சக்திகாந்த தாஸ், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாகவும் எந்தவித மாற்றமுமின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. வளர்ச்சியைப் புதுப்பிக்கவும், நிலைநிறுத்தவும், பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கத்தைத் தணிக்கவும் தேவையான வரை வசதியை ஏற்படுத்தி தர நாணயக் கொள்கைக் குழு (எம்.சி.சி) முடிவு செய்தது. 2021 - 2022 நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

வட்டி விகிதம் குறைக்கப்படாவிட்டாலும், விகிதம் அதிகரிக்கப்படாமல் இருப்பதே நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2020 மே 22ஆம் தேதி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 4 ஜுன் 2021