மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

வாகன பார்க்கிங் கட்டணம் : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

வாகன பார்க்கிங் கட்டணம் : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

மால்கள், வணிக வளாகங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் அதிக கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த விஜயகோபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடர்ந்தார். அதில், தமிழ்நாடு கட்டுமான விதிகளின்படி மால்கள், வணிக வளாகங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட சட்டவிரோதமாக அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றது. வாகன நிறுத்துமிடங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என ஆந்திரா, குஜராத் உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள மனுதாரர், வாகன நிறுத்துமிடத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மால்கள், வணிக வளாகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக கட்டண வசூல் குறித்து புகார் அளிப்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஜூன் 3) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஊரடங்கு முடிந்த பின்பு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும், இதுகுறித்து மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 3 ஜுன் 2021