மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

சிறை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக கருத வேண்டும்!

சிறை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக கருத வேண்டும்!

அனைத்து சிறை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டிருந்த கால கட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதன்படி, பல வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில்,இந்த வழக்கு விசாரணை இன்று(ஜூன் 3) நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு நடந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள சிறைகளில் தற்போது 13 ஆயிரத்து 854 கைதிகள் உள்ளனர். அதில், 1,295 சிறைக் கைதிகளுக்கு முதல் டோஸூம், 38 பேருக்கு இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளது. கைதிகள் மட்டுமல்லாமல், சிறை பணியாளர்கள் 700 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், சிறை பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக கருதி, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் புதிதாக தொற்று பாதிப்பு அதிகமானால், சிறைக் கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக முடிவு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு, நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பரோலில் விடுதலை செய்ய வாய்ப்புள்ள கைதிகள் குறித்த அறிக்கையை தயார் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வியாழன் 3 ஜுன் 2021