மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: இட்லி மிளகாய்ப்பொடி!

கிச்சன் கீர்த்தனா: இட்லி மிளகாய்ப்பொடி!

காலை நேரத்தில், இரவு நேரத்தில் சிற்றுண்டிக்கு சைடிஷாக என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் நேரமிருக்கும்போது எளிதாகச் செய்யக்கூடிய இந்த இட்லி மிளகாய்ப்பொடி செய்து வைத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு, கைபடாமல் ஸ்பூன் உபயோகப்படுத்தி பயன்படுத்தினால்... இது இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும். அவசரத்துக்குக் கைகொடுக்கும்.

என்ன தேவை?

காய்ந்த மிளகாய் - 100 கிராம்

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப்

எள் - 50 கிராம்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். எள்ளையும் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, எள் சேர்த்து பொடித்து எடுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வியாழன் 3 ஜுன் 2021