மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி!

உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி!

தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சிடி.மணி, உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிடி.மணி. தி.நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்ததால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவரது இயற்பெயர் மணிகண்டன்.

இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஐந்து முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனையும் பெற்றுள்ளார். புழல் சிறையில் இருந்து அண்மையில் ஜாமீனில் வெளிவந்த சிடி மணி தலைமறைவாகி விட்டார். இவரை பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னையை அடுத்த நாவலூரில் சிடி.மணி பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நேற்று இரவு தனிப்படை போலீசார் ரவுடியை சுற்றி வளைத்து கைது செய்தனர். சிடி மணியை பிடித்து சென்றபோது, போலீஸ் தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனை அந்த ரவுடி துப்பாக்கியால் சுட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்துள்ள உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிடி மணியை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

-வினிதா

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

புதன் 2 ஜுன் 2021