மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பொடி

கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பொடி

வாங்கி வைத்த மீதி தேங்காயை என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் நேரமிருக்கும்போது இந்த தேங்காய்ப்பொடியைச் செய்துவைத்துக் கொண்டு, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். காய்கறிகளைச் சமைக்கும்போது மேலே தூவிக் கிளறலாம். இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். இந்தப் பொடியை கொப்பரைத் தேங்காயில் தயாரித்தால், ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

என்ன தேவை?

முற்றிய தேங்காய் - ஒன்று

உளுத்தம்பருப்பு - 100 கிராம்

காய்ந்த மிளகாய் - 6

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய்விடாமல் வறுத்து... தேங்காய், உப்பு சேர்த்துப் பொடித்து நன்கு கலக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: பூண்டுப்பொடி!

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 2 ஜுன் 2021