மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

வருமானவரித் துறை இணையதளம்: இன்று முதல் 6ஆம் தேதி வரை செயல்படாது!

வருமானவரித் துறை இணையதளம்: இன்று முதல் 6ஆம் தேதி வரை செயல்படாது!

வருமானவரி செலுத்துவோருக்கு எளிமையாகவும், உடனடியாக ‘ரீபண்டு’ வழங்குவதற்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு வருமானவரித் துறை இணையதளம் இன்று (ஜூன் 1) முதல் 6ஆம் தேதி வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“வருமானவரி கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கு www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை வரும் 7ஆம் தேதி முதல் வருமானவரித் துறை அறிமுகப்படுத்த இருக்கிறது. வருமானவரி செலுத்துவோருக்கு எளிமையாகவும், உடனடியாக ‘ரீபண்டு’ வழங்குவதற்கு ஏதுவாகவும் இந்தப் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து கலந்துரையாடல்கள், பதிவேற்றம், நிலுவையில் உள்ள செயல்கள் அனைத்தும், ஒரே பக்கத்தில் தெரியும்படி இந்த இணையதளம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய இணையதளப் பக்கம் அறிமுகம் மற்றும் பழைய இணைய பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் புதிய பக்கத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக, பழைய இணையதளப் பக்கமான www.incometaxindiaefiling.gov.in இன்று (ஜூன் 1) முதல் வருகிற 6ஆம் தேதி வரை செயல்படாது. எனவே கணக்கு தாக்கல் செய்ய விரும்புவோர், வருகிற 7ஆம் தேதிக்குப் பின்னர் தாக்கல் செய்யலாம்” என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

செவ்வாய் 1 ஜுன் 2021