மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

பாலியல் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள ராஜகோபாலனை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகாரின் அடிப்படையில் கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூன் 8 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபக்கம், குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி வருகின்றது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சம்மனும் அனுப்பியுள்ளது.

ராஜகோபாலனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இன்று(ஜூன் 1) மனுவை விசாரித்த போக்சோ நீதிமன்றம், மூன்று நாட்கள் ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

ஜூன் 3ஆம் தேதி ராஜகோபாலனின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 1 ஜுன் 2021