மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

ஒருநாள் சம்பளத்தைக் கொடுத்த மயான ஊழியர்கள்!

ஒருநாள் சம்பளத்தைக் கொடுத்த மயான ஊழியர்கள்!

மதுரையைச் சேர்ந்த மயான ஊழியர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு தங்களின் ஒருநாள் ஊதியத்தை அளித்துள்ளனர்.

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்கி, சினிமா பிரபலங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், அரசு ஊழியர்கள், திருநங்கைகள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

தற்போது இந்த வரிசையில் மதுரை மாநகராட்சி மூலக்கரை தகன மேடையில் பணியாற்றும் 12 ஊழியர்களும் இணைந்துள்ளனர்.

மதுரையில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள்தோறும் கொரோனாவால் உயிரிழந்த 20க்கும் அதிகமானோர் உட்பட 70 உடல்கள் வரை மூலக்கரை நகராட்சி மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தகன மேடையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது பற்றி ஆட்சியர் அனிஷ் சேகரும், மாநகராட்சி ஆணையர் விசாகனும் இன்று(ஜூன் 1) ஆய்வு செய்தனர். அப்போது, தகனமேடையில் பணியாற்றும் 12 ஊழியர்கள், தங்களின் ஒருநாள் ஊதியமான 20 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இவர்கள், ஏற்கனவே கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் தங்களால் இயன்ற நிவாரண நிதியை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

செவ்வாய் 1 ஜுன் 2021