மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

வைகை அணையை திறக்க உத்தரவு!

வைகை அணையை திறக்க உத்தரவு!

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வைகை அணையிலிருந்து ஜூன் 4ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் , மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து 60 அடிக்கும் மேல் உள்ளது. இதையடுத்து தண்ணீர் திறக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று( ஜூன் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 1797 ஏக்கர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் 16452 ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் 26792 ஏக்கர், ஆக மொத்தம் 45041 ஏக்கர் நிலங்களுக்கு 04.06.2021 முதல் 120 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து 6739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று முல்லைப் பெரியாறு அணையிலும் இன்று முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஜூன் 1 ஆம் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். அதன்படி, இன்று தேக்கடி மதகுபகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி இருபோக ஆயக்கட்டு பாசனம் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடியும், குடிநீர் தேவைக்காக 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 1 ஜுன் 2021