மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

மின் தடை நேரம் குறைப்பு!

மின் தடை நேரம் குறைப்பு!

தமிழகத்தில் பராமரிப்புப் பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் நேரம் இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

துணை மின் நிலையங்களில் இருந்து 'பீடர்' எனப்படும் மின் வழித் தடங்களில் மின்சாரத்தை அனுப்பி, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி, மின் கம்பம், 'கேபிள்' உள்ளிட்ட சாதனங்களின் உதவியுடன், விநியோகம் செய்கிறது. மேற்கண்ட சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கின்றன. இதனால், அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

பராமரிப்புப் பணிக்காக மாதத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். அதற்கான அறிவிப்புகள் முன்கூட்டியே செய்தித்தாள்களிலும், அந்தப் பகுதியில் வசிப்போர்களுக்கு குறுஞ்செய்தியிலும் அனுப்பப்படும். அதற்கேற்றபடி, மக்கள் தேவையானதை செய்து கொள்வார்கள்.

தற்போது முழு ஊரடங்கு காரணமாகப் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கின்றனர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒருநாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படுவதால் பெரும் சிரமம் ஏற்படுவதாக புகார் வந்தது.

இதுகுறித்து மின்சாரம் வாரிய அதிகாரிகள் கூறுகையில், வீட்டிலிருந்து பணி செய்பவர்கள் மற்றும் வகுப்புகள் நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு இனிமேல் பராமரிப்புப் பணிகளுக்காக மின் நிறுத்த நேரத்தை 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் 2 மணி நேரம் மட்டுமே மின் தடை செய்யப்பட வேண்டும் என்றும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யாமல் பிற்பகல் 12 மணிக்குள் ஏதாவது 2 மணி நேரத்தில் மின்சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நேரமானது அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தாது. சம்பந்தப்பட்ட பகுதிகளின் பராமரிப்புப் பணிக்கேற்ப நேரமும் மாறுபடும். எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு நேரம் மின் தடை செய்யப்படுகிறது என்ற அட்டவணையும் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கொரோனா சிகிச்சை மையமோ, மருத்துவமனையோ இருந்தால் 2 மணி நேரம் மட்டுமே மின் தடை செய்யும் வகையில் நேரம் மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

-வினிதா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

செவ்வாய் 1 ஜுன் 2021