மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: பூண்டுப்பொடி!

கிச்சன் கீர்த்தனா: பூண்டுப்பொடி!

தற்போதைய லாக்டெளன் நிலையில் அவசரத்துக்குக் கைகொடுக்கும் இந்தப் பூண்டுப்பொடி, வாயுத் தொல்லையை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது. செய்வது எளிது.

என்ன தேவை?

பூண்டு - 250 கிராம்

காய்ந்த மிளகாய் - 10

உளுத்தம்பருப்பு - ஒரு கப்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன்... மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

நேற்றைய ரெசிப்பி: பருப்புப்பொடி!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 1 ஜுன் 2021