மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

சென்னை: இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள்!

சென்னை: இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள்!

சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் முன்களப் பணியாளர்கள் சிரமமின்றி செல்ல இன்று முதல் மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, கூடுதலாக 57 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைய தொடங்கியதால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் மின்சார ரயில் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வார நாட்களில் 151 மின்சார ரயில் சேவை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் முன்களப் பணியாளர்கள் சிரமமின்றி செல்ல இன்று (31ஆம் தேதி) முதல் மின்சார ரயில் சேவையை அதிகரித்து சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 151இல் இருந்து 208 மின்சார ரயில் சேவையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (மே 31) முதல் மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 86 மின்சார ரயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 32 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 ரயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 ரயில் சேவையும் என 208 மின்சார ரயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 31 மே 2021