மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

வேலைவாய்ப்பு: புதுப்பிக்க தவறியவர்களுக்குச் சிறப்புச் சலுகை!

வேலைவாய்ப்பு: புதுப்பிக்க தவறியவர்களுக்குச் சிறப்புச் சலுகை!

2017, 2018, 2019ஆம் வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்க தவறியவர்களுக்குச் சிறப்புச் சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, ப்ளஸ் டூ, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும். இந்த நிலையில் 2017 ,2018, 2019ஆம் வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்புச் சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் கிர்லோஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பில், ‘வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்குச் சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கலாம் என அரசுக்குப் பரிந்துரை வழங்கினார்.

இந்தக் கருத்தினை அரசு ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பகங்களில் 2017, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் (1.1.2017 முதல் 31.12.2019 வரை) வேலைவாய்ப்பு அலுவலக பதிவைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சிறப்புப் புதுப்பித்தல் சலுகையை வழங்கி அரசு ஆணையிடுகிறது.

அரசாணையில் தெரிவித்துள்ளவாறு இந்த சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது, வருகிற ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம்.

அவ்வாறு இணையதளம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குப் பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையதளம் மூலமாகப் புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி வருகிற ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி வரை பதிவுதாரர்கள் தங்களுடைய பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கணக்கின்படி தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

திங்கள் 31 மே 2021