மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

ஆம்னி பேருந்து: காலாண்டு வரியைத் தள்ளுபடி செய்ய கோரிக்கை!

ஆம்னி பேருந்து: காலாண்டு வரியைத் தள்ளுபடி செய்ய கோரிக்கை!

ஆம்னி பேருந்துகளுக்கு இரண்டாவது காலாண்டு (ஏப்ரல், மே, ஜூன்) சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் அன்பழகன், தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 90 சதவிகித ஆம்னி பேருந்துகள் கடந்த ஒரு வருடமாக இயங்காமல் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 10.4.2021 முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள முழு ஊரடங்கால், 100 சதவிகிதம் ஆம்னி பேருந்துகள் முற்றிலும் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆகையால் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு இரண்டாவது காலாண்டு (ஏப்ரல், மே, ஜூன்) சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். அடுத்து மூன்றாவது காலாண்டு (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) சாலை வரியை 50 சதவிகிதம் வசூலித்து உதவி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 31 மே 2021