மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்?

பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் எத்தனை பேர்?

பல்வேறு காரணங்களால் பள்ளிகளில் இடையில் படிப்பை நிறுத்திய குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை ஜூன் 30ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுள்ளது.

பொருளாதார நிலை, வாழ்வாதாரம் இல்லாமல் ஏழ்மை நிலை, குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தும் நிலை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ளது.

தமிழகத்திலும் பல இடங்களில் இந்த இடைநிற்றல் உள்ளது. இதையடுத்து, பள்ளி இடைநிற்றல் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கிராம அளவில் குழுக்களை நியமித்து பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிக்கவும் மத்திய அரசு கேட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடங்கியதற்குப் பிந்தைய காலத்தை அளவீடாகக் கொண்டு பள்ளிக் குழந்தைகளின் இடைநிற்றல் விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் எத்தனை பேர், அவர்கள் தற்போது யாருடைய பராமரிப்பில் உள்ளனர் என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். இந்தக் குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன, அவர்களின் எதிர்காலத்துக்கு என்ன செய்ய முடியும் என்பதை அரசு ஆய்வு செய்து கேரள மாநிலத்தைப்போல் அவர்களுக்கு இலவச கல்வி, சிறப்பு நிதி உதவி ஆகியவற்றை செய்து தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், “கொரோனா தொற்று காலத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதை அரசு கவனித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கல்வியாளர் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

-ராஜ்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

திங்கள் 31 மே 2021