மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

ராஜகோபாலன் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு!

ராஜகோபாலன் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு!

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பின்போது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜூன் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போதுவரை, ராஜகோபாலன் மீது 5 மாணவிகள் நேரடியாக புகார் தெரிவித்துள்ளனர். புகார் குறித்து சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் புகார் குறித்து பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகள் வரும் ஜூன் 8ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ராஜகோபாலன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதுபோன்று, ராஜகோபாலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி காவல்துறையும் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த இரண்டு மனுக்களும் இன்று(மே 31) நீதிபதி முகமது பரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஜூன் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதே போல் ராஜகோபாலன் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை நாளைக்கு(ஜூன் 1) தள்ளிவைப்பதாகவும் உத்தரவிட்டார்.

இந்த மனு விசாரணையில் ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிக்குமா? எத்தனை நாள் அனுமதிக்கும் என்பது குறித்த தகவல் நாளைக்கு தெரிந்துவிடும்.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 31 மே 2021