மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

இபிஎப்: முன்பணம் எடுக்க அனுமதி!

இபிஎப்:  முன்பணம் எடுக்க அனுமதி!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, இபிஎப் சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து 2வது முறையாக முன்பணம் எடுத்துக் கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎப்ஓ) அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் இபிஎப் சந்தாதாரர்கள் சிறப்பு முன்பணம் எடுத்துக்கொள்ளும் வசதி பிரதமரின் PMGKY என்ற திட்டத்தின் கீழ் கடந்த 2020 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான திருத்தத்தை அரசாணை மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1952ல், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செய்தது.

இந்த விதிமுறையின் கீழ், 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது இபிஎப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ, அதை திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணமாக இபிஎப் சந்தாதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம். குறைவான தொகைக்கும், உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

கொரோனா தொற்று காலத்தில் தற்போது, வரை இபிஎப்ஓ 76.31 லட்சம் முன்பண கோரிக்கைகளை ஏற்று, உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.18,698.15 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் ‘மியூகோமைகோசிஸ்அதிகமாக பரவும் நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிக்கலான நேரத்தில், உறுப்பினர்களின் நிதி தேவைகளை தீர்க்க, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இபிஎப்ஓ முயற்சிக்கிறது. ஏற்கனவே முதல் முன்பணம் எடுத்த இபிஎப் உறுப்பினர்கள், தற்போது, 2வது முறையாக முன் பணம் எடுக்கலாம். இதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள், முதல் முன்பணம் எடுத்ததற்கான விதிமுறைகளை போன்றதுதான் என்று தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் நிறுவனத்தின் பங்களிப்புத் தொகையை பணியாளரின் கணக்கில் சேர்ப்பது நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசால் வழங்கப்படும் நல திட்டங்கள் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு சென்று சேர்வதை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-வினிதா

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 31 மே 2021