மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

கிச்சன் கீர்த்தனா: பருப்புப்பொடி!

கிச்சன் கீர்த்தனா: பருப்புப்பொடி!

அடுக்களையில் அதிக நேரம் செலவழிக்க முடியாதபோது, ‘சமய சஞ்சீவினி’யாக கைகொடுத்து உதவுவதில் பொடிகள் முக்கிய இடம் பெறுகின்றன. மேலும்... சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என்று எல்லாவற்றிலும் சுவை சூப்பராக அமைவதில், பொடிகளின் பங்கு ரொம்பவே உண்டு. சூடான சாதத்தில் இந்தப் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட... சுவை அசத்தலாக இருக்கும்.

என்ன தேவை?

துவரம்பருப்பு - 2 கப்

கடலைப்பருப்பு - ஒரு கப்

காய்ந்த மிளகாய் - 6

மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு

எண்ணெய்விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம்.

சண்டே ஸ்பெஷல் - எடையைக் குறைக்க இதுதான் நேரம்!

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

திங்கள் 31 மே 2021