மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

பாலியல் புகார்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு நோட்டீஸ்!

பாலியல் புகார்:  புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு நோட்டீஸ்!

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக அப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் மீதான பாலியல் புகாரையடுத்து, தொடர்ந்து பல புகார்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்ட பிஎஸ்பிபி மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பிஎஸ்பிபி ஆசிரியர் ராஜகோபாலன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் விளையாட்டு அகாடமியின் பயிற்சியாளர் நாகராஜன் மீதும் பாலியல் புகார் அளிக்கப்பட்டது. நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கீழ்ப்பாக்கம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, ஆர்.ஏ.புரம் செட்டிநாடு வித்யாஷ்ரமம், செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் ஆகிய மூன்று பள்ளிகளுக்கும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்காக சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், சென்னை செனாய் நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், செனாய் நகர், புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளியின் தாளாளர்/முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் ஆஜராகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பெயர் மற்றும் அன்னார் மீது பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை விவரம் மற்றும் அவ்வாசிரியர் மீது இதற்கு முன்பு மாணவிகளிடயிருந்து புகார் ஏதும் பெறப்பட்டு பள்ளி நிர்வாகத்தால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற விவரத்தினை இச்செயல்முறை கிடைக்கப்பெற்ற அன்றே இவ்வலுவலகத்தில் சமர்பித்திட பள்ளியின் தாளாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

ஞாயிறு 30 மே 2021