mகிராமங்களில் தடுப்பூசி : ஹெல்ப் லைன் எண்!

public

கிராமப்புறங்களில் தொழில்நுட்பம் மற்றும் இணையம் வசதி இல்லாத இடங்களில் ‘1075’ என்ற எண்ணிற்கு அழைத்து கொரோனா தடுப்பூசி போடும் இடத்தை பதிவு செய்யலாம் என்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலை கிராமப்புறங்களில் அதிகளவு பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகின்றது. முதல் அலையின்போது நகர மக்களை அதிகளவில் பாதித்தது. தற்போது சின்ன கிராமங்களிலும் கூட தொற்று பாதிப்பு உள்ளது. 1500 பேர் வசிக்கின்ற கிராமத்தில் குறைந்தது 50 பேருக்காவது தொற்று பாதிப்பு உள்ளது. தொற்று அதிகமாகி கொண்டிருக்கிற நிலையில், கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்தான போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது நிலைமையை மோசமாக்குகிறது.

தடுப்பூசி செலுத்த முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தொழில்நுட்பம் மற்றும் இணைய வசதி இல்லாததால், தடுப்பூசி செலுத்துவது பெரிய சவாலாக உள்ளது.

இதுகுறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மா கூறுகையில், ”கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ‘1075’ என்ற ஹெல்ப் லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொடர்புக் கொண்டு தடுப்பூசி போடும் இடத்தை மக்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

கிராமப்புற மக்களிடையே ஹெல்ப்லைன் எண் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட சேகரிப்பாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களின் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக தடுப்பூசி போடும் மையத்திற்குச் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18-44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும், அது தற்காலிக பிரச்சினை, விரைவில் சரி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், இதுவரை 20,54,51,902 கொரோனா தடுப்பூசி டோஸ் பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளது. 98,27,025 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியின் முதல் டோஸையும், 67,47,730 சுகாதார பணியாளர்கள் இரண்டாவது டோஸையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

முன்கள பணியாளர்களில் 1,53,39,068 பேர் முதல் டோஸையும், 84,19,860 பேர் இரண்டாம் டோஸையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

45-59 வயதுடையவர்களில் 6,35,32,545 பேர் முதல் டோஸையும், ,1,02,15,474 பேர் இரண்டாவது டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5,77,48,235 பேர் முதல் டோஸையும் 1,84,69,925 பேர் இரண்டாவது டோஸையும் எடுத்துக் கொண்டுள்ளனர். 18- 44 வயதுடையவர்களில் 1,51,52,040 பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *