மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

சிறு, குறு விவசாயிகளுக்கு வாடகை இல்லாமல் டிராக்டர்!

சிறு, குறு விவசாயிகளுக்கு வாடகை இல்லாமல் டிராக்டர்!

விவசாயிகளுக்கு உதவும் வகையில் டஃபே டிராக்டர் நிறுவனம் இலவசமாக உழவு ஓட்டிக்கொள்ள டிராக்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று மக்களை நிலைகுலைய வைத்துநிலையில் விவசாயிகள் விளைபொருள் உற்பத்தி, அதன் விற்பனை என்று பல சவால்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் டஃபே டிராக்டர் நிறுவனம் இலவசமாக உழவு ஓட்டிக்கொள்ள டிராக்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய சாகுபடி காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்காக இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை, டஃபே அறிவித்துள்ளது.

இந்த இலவச டிராக்டர் வாடகை திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள சுமார் 50,000 விவசாயிகளின் 1,20,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2021 ஜூலை மாதம் வரை மாநிலம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும். தமிழ்நாட்டில் இரண்டு ஏக்கர் அல்லது அதற்கு (இரண்டு ஏக்கருக்கும்) குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய விவசாயிகளின் நலனுக்கான இந்த இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அறிவித்துள்ளோம்.

16,500 மேஸி ஃபெர்குசன் மற்றும் ஐஷர் டிராக்டர்கள் (Massey Ferguson and Eicher tractors) மற்றும் 26,800 வேளாண் சாதனங்களை இத்திட்டத்தின் மூலம் டஃபே நிறுவனம் வழங்குகிறது.

தமிழக அரசின் உழவன் செயலியில் (Uzhavan app) உள்ள ஜேஃபார்ம் சர்வீசஸின் டிஜிட்டல் செயல்தளத்தின் வழியாகவோ, கட்டணமில்லாத உதவி எண் 1800-4200-100 வழியாகவோ விவசாயிகள் பதிவு செய்து டிராக்டர்களை எடுக்கலாம். தமிழ்நாடு அரசின் வேளாண்துறை மற்றும் அத்துறையின் மாவட்ட அதிகாரிகளின் ஆதரவோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் உழவு ஓட்டுவதற்கு மட்டுமல்லாமல் விதை போடுவதற்கு, களையெடுப்பதற்கு எனப் பலவித பணிகளுக்கும் கருவிகளை வழங்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போதும் டஃபே நிறுவனம் இந்த வசதியை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 29 மே 2021