மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

முறைகேடாக மெட்ரோ வாட்டர் வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை!

முறைகேடாக மெட்ரோ வாட்டர் வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை!

முறைகேடாக மெட்ரோ வாட்டர் வாங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் புதிய நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது.

சென்னையில் மெட்ரோ வாட்டர் மூலம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தெருக்குழாய்கள் மூலமும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் மற்றும் குடிநீர் இணைப்பு இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களுக்குக் கூடுதல் தண்ணீர் தேவைக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கான வாரிய ஒப்பந்ததாரர்கள் இருக்கிறார்கள். தண்ணீர் தேவைப்படுபவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். 6,000 லிட்டர் ரூ.475 மற்றும் 9,000 லிட்டர் ரூ.700 என லாரிகளில் தண்ணீர் விற்கப்படுகிறது.

இதில் பதிவு செய்தால் வரிசைபடிதான் தண்ணீர் கிடைக்கும். மேலும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில்தான் தண்ணீருக்குப் பதிவு செய்ய முடியும்.

எனவே அவசர தேவை மற்றும் கூடுதல் தேவைகளுக்காக லாரி ஒப்பந்ததாரர்கள், டிரைவர்கள் பழக்கம் மூலமாகவே முறைகேடாகக் கூடுதல் விலைக்குத் தண்ணீர் வாங்குகிறார்கள்.

இதைக் கட்டுப்படுத்த குடிநீர் வாரியம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி முறைகேடாக தண்ணீர் சப்ளை செய்யும் லாரிகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் நாள் முழுவதும் உள்ள டிரிப்புகள் ரத்து செய்யப்படும்.

புதிய நடவடிக்கைப்படி லாரி உரிமையாளர், டிரைவர் மற்றும் தண்ணீர் வாங்கியவர் ஆகிய மூன்று பேர் மீதும் நடவடிக்கை பாயும். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 379 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இதன் மூலம் மூன்று ஆண்டுகள் ஜெயில் அல்லது அபராதம் அல்லது இரண்டும்கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிற புதிய நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது.

-ராஜ்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 28 மே 2021