மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

ஊரடங்கு எதிரொலி: சென்னையில் குறைந்த காற்று மாசு!

ஊரடங்கு எதிரொலி: சென்னையில் குறைந்த காற்று மாசு!

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி ஊரடங்கு காரணமாகப் போக்குவரத்து தடையால் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

தொழிற்சாலைகள், போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை உட்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது. சென்னை நகரிலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நகரில் போக்குவரத்து குறைந்துள்ளது. மக்கள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களால் ஏற்படும் புகை மாசு பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

வேளச்சேரியில் காற்று மாசு அளவு 73இல் இருந்து 47 ஆக குறைந்துள்ளது. இதுபோல் நகரின் அனைத்து பகுதிகளிலும் காற்று மாசு பெருமளவு குறைந்து இருக்கிறது. தி.நகர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளிலும் காற்று மாசு பெருமளவு குறைந்து இருக்கிறது.

சராசரியாக சென்னை நகரில் காற்று மாசு 27 சதவிகிதம் குறைந்து இருக்கிறது. புறநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான ஆலைகளில் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளிலும் காற்று மாசு குறைந்துள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 28 மே 2021