மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

பாலியல் புகார் : சமூகத்திற்கு எதிரான குற்றம்!

பாலியல் புகார் : சமூகத்திற்கு எதிரான குற்றம்!

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிரான பாலியல் புகார் தனி நபர் சம்பந்தப்பட்டது அல்ல: அது சமூகத்திற்கு எதிரான குற்றம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த ஆயுதப் படை தலைமைக் காவலர் சதீஷ் பாபு என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினரை இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று சந்தித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் சங்கர் ஜிவால், “அனைத்து போக்சோ வழக்குகளும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிரான பாலியல் புகார் தனி நபர் சம்பந்தப்பட்டது அல்ல: அது சமூகத்திற்கு எதிரான குற்றம். கைதான ராஜகோபாலன் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. பாலியல் புகார் அளிப்பதற்கான எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம சேஷாத்ரி பள்ளியில் மேலும் 2 மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். புகாரளிக்கும் மாணவிகளின் ரகசியம் காக்கப்படும்.

சமூக வலைதளங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் புகார் அளிக்கலாம். சமூக வலைத்தளத்தில் வரும் புகார்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி பாலியல் விவகாரம் தொடர்பாக காவல்துறை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 28 மே 2021