மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

சிகிச்சை இல்லாமல் யாரும் உயிரிழக்கவில்லை: உயர் நீதிமன்றம்!

சிகிச்சை இல்லாமல் யாரும் உயிரிழக்கவில்லை: உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்,சிகிச்சை இல்லாமல் உயிரிழந்ததாக எந்த புகாரும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சிகிச்சையின்போது எந்த மருத்துவரும், செவிலியரும் கொரோனா வார்டுக்கு வரவில்லை. இதே நிலை நீடித்தால் கொரோனாவால் பலியாவதை விட, மருத்துவர்கள், செவிலியர்கள் அஜாக்கிரதையால் பலியாவார்கள். அதனால், கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களைக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(மே 28) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. மேலும் கொரோனா இரண்டாம் அலை தணிந்து வருகிறது என தெரிவித்த நீதிபதிகள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஆரம்பத்தில் குறைவாக இருந்தது. தற்போது வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில்லாமல் யாரும் உயிரிழந்ததாக புகார் இல்லை என்று கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 28 மே 2021