மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

வீரர்களுக்குத் தடுப்பூசி: விவரம் கேட்கும் ஒலிம்பிக் சங்கம்!

வீரர்களுக்குத் தடுப்பூசி: விவரம் கேட்கும் ஒலிம்பிக் சங்கம்!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போட்ட முழு விவரங்களைத் தெரிவிக்கும்படி தேசிய விளையாட்டு சம்மேளனங்களை, இந்திய ஒலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஓராண்டு தள்ளிவைக்கப்பட்ட 32ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி போட்ட முழு விவரங்களையும் தெரிவிக்கும்படி தேசிய விளையாட்டு சம்மேளனங்களை, இந்திய ஒலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்த விவரங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டியது இருப்பதால் தடுப்பூசியின் பெயர் மற்றும் அதன் ஒவ்வொரு டோஸும் போட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்படி தெரிவித்துள்ளது.

இந்திய வீரர்கள் எந்த நாட்டில் இருந்து டோக்கியோ செல்கிறார்கள் என்ற விவரத்தையும் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது. அத்துடன் போட்டிக்குப் புறப்படும் முன்பாக கொரோனா தடுப்பு நடைமுறைகள் குறித்து வீரர்களுக்கு முழுமையாக விளக்க வேண்டும் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 28 மே 2021