மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து மகிரிஷி வித்யா பள்ளி!

பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து மகிரிஷி வித்யா பள்ளி!

பத்ம சேஷாத்ரி பள்ளியைத் தொடர்ந்து, சென்னை அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரையடுத்து, ஆசிரியர் ஆனந்தை இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பிரச்சினையை விட பாலியல் புகார் பிரச்சினை கடந்த மூன்று தினங்களாக அதிகரித்து வருகிறது. பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, பல மாணவிகளும் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

சென்னை அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றிய ஆனந்த் என்பவர் மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது.

இதுகுறித்து அப்பள்ளிநிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கடந்த இரு நாட்களாக மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, எங்கள் பள்ளி மாணவிகள் சமூக வலைதளங்களிலும், மெயிலிலும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை வரப்பெற்ற புகார்களும், இனிமேல் வருகிற புகார்களையும் விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி நடத்தும் விசாரணை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்கும்.

ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் வந்ததையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பள்ளியில் படித்த, படிக்கின்ற எந்த மாணவர்களையும் அந்த ஆசிரியர் தொடர்புக் கொள்ளக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மீது எந்தவொரு துஷ்பிரயோகத்தையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எங்களுக்கு மாணவர்கள் நலன்தான் முக்கியம். பள்ளியில் படிப்பை முடித்து விட்டு சென்றாலும், மாணவர்கள் எப்போதும் எங்களுக்கு விலைமதிப்பற்றவர்கள். மாணவர்களுக்கு எந்த விதத்திலும் துஷ்பிரயோகம் நடப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என மீண்டும் வலியுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து, அடுத்தடுத்து பள்ளிகள் பாலியல் வழக்கில் சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் வழக்கைத் தொடர்ந்து எங்களுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. சென்னை அல்லாமல், மற்ற மாவட்டங்களில் உள்ள புகார்களை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் ஆசிரியர் ஆனந்தை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. அவரிடமும் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 28 மே 2021