மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

கிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காயத் துவையல்

கிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காயத் துவையல்

இந்த லாக்டெளன் காலத்தில் துவையல் வகைகள் பலருக்கும் உதவும். காய்கறி, கீரை, மூலிகைகள் என எல்லாவற்றிலும் செய்யக்கூடிய துவையல் வகைகளை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். சில துவையல்களை சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். தோசை, இட்லி, சப்பாத்தி, உப்புமா எனச் சிற்றுண்டிகளுக்கு சைடிஷ்ஷாகவும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த சின்ன வெங்காயத் துவையலில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம் இருப்பதால், ரத்தசோகை வருவது தடுக்கப்ப‌டும். எலும்புகள் உறுதியாகும். குளிர்ச்சியைத் தரும். அனைவரும் சாப்பிட ஏற்றது.

என்ன தேவை?

சின்ன வெங்காயம் - 100 கிராம்

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

பூண்டு - 4

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய் - 6

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

வெல்லம் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகாயைப் போட்டு, சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு டீஸ்பூன் எண்ணெயில், பூண்டு, புளி, வெங்காயம் சேர்த்து, பச்சை வாசனை போக, வதக்க வேண்டும். இவற்றை மிக்ஸியில் போட்டு, உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். விருப்பப்பட்டால், ஒரு டீஸ்பூன் கடுகு தாளித்துச் சேர்க்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: பருப்புத் துவையல்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 28 மே 2021