மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

மக்களின் பசியாற்றும் காவல்துறை அதிகாரிகளின் மனைவிகள்!

மக்களின் பசியாற்றும் காவல்துறை அதிகாரிகளின் மனைவிகள்!

கொளத்தூர் தொகுதியில் அமைந்துள்ள செம்பியம் பகுதியில் காவல்துறை அதிகாரிகளின் மனைவிகள் ஒன்றாக இணைந்து சாலையோர மக்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் ஒரு வார தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தினசரி கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்ற மக்கள் மற்றும் சாலையோர மக்கள் உணவின்றி மிகவும் கஷ்டப்படுகின்றனர். இருப்பினும், இவர்களைப் போன்ற மக்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களும் இருக்கின்றனர். ஆதரவற்ற மக்களுக்கு பெண்கள், இளைஞர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியின் செம்பியம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளின் மனைவிகள் ஒன்றாகச்சேர்ந்து தங்களுக்குள் பணம் வசூலித்து, பொருட்களை வாங்கி, உணவு சமைத்து, பொட்டலங்களாகப் போட்டு, ஏழை எளிய மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று உணவு பொட்டலத்தையும், தண்ணீர் பாட்டில்களையும் வழங்கி வருகின்றனர்.

செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் துளசிமணி, செம்பியம் சரக உதவி ஆணையர் வீரமணி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் இவர்களுக்கு உதவியாக அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்குகின்றனர்.

இந்தக் குழு கடந்த 10 நாட்களாக செம்பியம், பெரம்பூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் குறைந்தது 300 பேருக்காவது உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். வார நாட்களில் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளையும் வழங்கி வருகின்றனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 27 மே 2021