மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

கீழே போட்ட லாட்டரிச் சீட்டுக்கு ஏழரை கோடி பரிசு!

கீழே போட்ட லாட்டரிச் சீட்டுக்கு ஏழரை கோடி பரிசு!

அமெரிக்காவில் பரிசுக்கான எண்ணை சரியாகச் சுரண்டிப் பார்க்காமல் கீழே போட்ட லாட்டரிச் சீட்டுக்கு ஏழரை கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. அந்தச் சீட்டை உரியவரிடம் ஒப்படைத்த இந்தியருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது.

அமெரிக்காவில் மசாசூசெட்சில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஷா குடும்பத்தினர் கடை வைத்துள்ளனர். இந்தக் கடையில் வாடிக்கையாளரான லீ ரோஸ் பீகா என்ற பெண், ஒரு லாட்டரிச் சீட்டை வாங்கினார். அவசர அவசரமாக லாட்டரிச் சீட்டின் ரகசிய எண்ணை சுரண்டிப்பார்த்ததில் பரிசு விழவில்லை என எண்ணி, அந்தச் சீட்டை கடையில் அப்படியே போட்டுவிட்டு நடையைக் கட்டினார். அதை வாங்கிய கடைக்காரரும் ஒரு மூலையில் போட்டார்.

ஆனால், ஒரு மாலைப்பொழுதில் குவியலாகக் கிடந்த பழைய லாட்டரிச்சீட்டுகளை அகற்றினர். அப்போது ரகசிய எண்ணை சரியாகச் சுரண்டிப்பார்த்திராத ஒரு சீட்டைக் கண்டெடுத்து, சோதித்தபோது அதற்கு ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ஏழரை கோடி ரூபாய்) பரிசு விழுந்திருந்தது தெரியவந்தது.

அந்தச்சீட்டை அபிஷாவின் தாயார் அருணா ஷாதான், லீ ரோஸ் பீகாவுக்கு விற்றிருந்தார் எனத் தெரிந்தது. உடனே மிகுந்த நேர்மையுடன் லீ ரோஸ் பீகாவை அபிஷா குடும்பத்தினர் நேரில் வரவழைத்து அவரது பரிசுச்சீட்டை ஒப்படைத்தனர். அதைப்பார்த்து, ‘‘இப்படியும் நேர்மையான மனிதர்களா?” என வியந்துபோன லீ ரோஸ் பீகா, அவர்களைப் பாராட்டினார்.

இதுபற்றிய செய்தி அங்கு உள்ளூர் ஊடகங்களில் வெளியானது. அதைத் தொடர்ந்து அபிஷா குடும்பத்தினர் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதுபற்றி அபிஷா கூறுகையில், “அந்தப் பரிசு சீட்டை நான் வைத்திருந்தால்கூட இந்த அளவுக்கு பிரபலமாகி இருக்க மாட்டேன். ஆனால் உரியவரிடம் ஒப்படைத்ததால் மிகவும் பிரபலமாகி விட்டேன். அதைத் திருப்பித் தந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வியாழன் 27 மே 2021