மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

தேர்வை ரத்து செய்யுங்கள்: நீதிபதிக்கு மாணவர்கள் கடிதம்!

தேர்வை ரத்து செய்யுங்கள்: நீதிபதிக்கு மாணவர்கள் கடிதம்!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு 297 மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

“நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய கொரோனா சூழலில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டாம்” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியுள்ள 297 மாணவர்கள்...

மேலும் அந்தக் கடிதத்தில், “மாற்று முறையில் மதிப்பெண்ணைக் கணக்கீடு செய்ய வேண்டும். ஏனெனில் இதுவரை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மேலும், பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் பல மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். தேர்வு நடத்தும்பட்சத்தில் அவர்கள் மீண்டும் திரும்பி வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

தேர்வுக்காக மாணவர்கள் பயணம் செய்யும் சூழல் அமையும்போது, அது மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாருக்கும், வீட்டில் உள்ள முதியோருக்கும் கொரோனா தொற்று ஆபத்தை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

“பல பள்ளிகள் கொரோனா சிகிச்சை மையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. அவற்றை தேர்வு மையமாக மாற்றும்போது கொரோனா கட்டுப்பாடு பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

இதைக் கருத்தில்கொண்டு, கடந்த ஆண்டு இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் தலையிட்டு தேர்வுகளை ரத்து செய்ததுடன், மதிப்பெண் வழங்க மாற்று முறையைப் பின்பற்ற அறிவுறுத்தியது.

எனவே அதுபோன்று நடப்பு ஆண்டும் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்று அவர்கள் கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 27 மே 2021