மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

கருப்பு பூஞ்சை மருந்து ரூ.1200 ஆக நிர்ணயம்!

கருப்பு பூஞ்சை மருந்து ரூ.1200 ஆக நிர்ணயம்!

கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்தின் விலை ரூ.1,200-ஆக நிர்ணயிக்கப்பட்டு, வரும் திங்கள்கிழமை முதல் விற்பனைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிற நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா நோயாளிகளில் நீரிழிவு பாதிப்புள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்கள்தான் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இந்த மருந்தை தயாரிக்க ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ அமைச்சர் நிதின் கட்காரியின் முயற்சியால் மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ஜெனிட்டிக் லைப் சயின்ஸ் நிறுவனம், ஆம்போடெரிசின் பி ஊசி மருந்தை தயாரிக்க தொடங்கியுள்ளது. இந்த மருந்து விற்பனை வருகிற திங்கள்கிழமை(மே 31) முதல் தொடங்கும் என்றும், மருந்து ஒன்றின் விற்பனை விலை ரூ.1,200 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த மருந்து ரூ.7000க்கு விற்கப்பட்டு வருகிறது.

முதலில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் விற்பனை செய்யப்படும். அதனை தொடர்ந்து கேரளா, தமிழகம், கர்நாடகா என நோய் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் கருப்பு பூஞ்சை மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இறக்குமதியின் மூலமாகவும், உள்நாட்டு தயாரிப்பின் மூலமாகவும் ஆம்போடெரிசின்-பி மருந்து இருப்பை அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டு இருந்தார். உலகில் எங்கு இந்த தடுப்பூசி கிடைத்தாலும் வாங்கி அனுப்ப, தூதரகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 27 மே 2021