மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை!

அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை!

கொரோனாவால் உயிரிழந்த முன் களப்பணியாளர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது வரை 89 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த மருத்துவர் சண்முகப்பிரியா 8 மாத கருவுற்று இருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல் வேலூர் பகுதியை சேர்ந்த செவிலியர் பிரேமா சென்னையை சேர்ந்த செவிலியர் இந்திரா ஆகியோர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக முன்கள பணியாளராக இருக்கும் மருத்துவர், செவிலியர், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகியோர் பலர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

இவர்களின் குடும்பத்தினர், வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். தற்போது வரை தமிழக அரசு இவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே, மருத்துவர் உயிரிழந்தால் 50 லட்சம், செவிலியர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்தால் 25 லட்சம், தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால், மேற்கூறியவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு தமிழக அரசு தேவையான நிவாரணங்களை வழங்கி வருகின்றது. இது மாநில அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் புதிதாக உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை. உயிரிழந்த முன் களப்பணியாளர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை குறித்து பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 27 மே 2021