மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 27 மே 2021

கோவையில் அதிகரிக்கும் கொரோனா : ஆலோசனையில் ஆணையர்!

கோவையில் அதிகரிக்கும் கொரோனா : ஆலோசனையில் ஆணையர்!

கோவையில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியபோது, சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டம் இருந்தது. தொற்று அதிகரிக்க அதிகரிக்க இரண்டாவது இடத்துக்கு வந்த கோவை, தற்போது சென்னையை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு வந்துள்ளது. கொரோனா உயிரிழப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கோவையில் நேற்று மட்டும் 4268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இதுவரை 1,50,770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேல் பலி எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது. கோவை புறநகரில் 40 சதவீதம் பேரும், மாநகரில் 60 சதவீதம் பேரும் கோரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

கோவையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட 3,805 படுக்கைகளில் 40 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. ஆக்சிஜன் வசதி இல்லாத 3,149 படுக்கைகளில் 503 படுக்கைகளும், 708 ஐசியூ படுக்கைகளில் 6 படுக்கைகளும் மட்டுமே காலியாக உள்ளன. கொரோனா மருத்துவ மையங்களில் உள்ள 2947 படுக்கைகளில் 605 மட்டுமே காலியாக உள்ளன.

சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளதால், பரிசோதனையும் அதிகளவில் நடைபெறுகிறது. அதுபோன்று வட இந்தியாவை சேர்ந்த பலரும் இங்கே தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும்போது, அந்த எண்ணிக்கையும் கோவை மாவட்டத்தில்தான் சேர்க்கப்படும் என்பதால் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது என மருத்துவர் ஒருவர் கூறினார்.

கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையில் முன்கள பணியாளர்களை அதிகளவில் ஈடுபடுத்த ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். கோவையில் 400 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியே வராதவாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவையில் கொரோனா பாதிப்பை குறைப்பது குறித்து ஆலோசிக்க சென்னையிலிருந்து உயரதிகாரிகள் கோவை சென்றுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் இன்று(மே 27) கோவை மாநகராட்சி ஆணையர் சென்னையிலிருந்து வந்த உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 27 மே 2021