மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் இருந்து வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் டி.ஏ எனப்படும் அகவிலைப்படி ஏற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு ஊழியர்களின் மாறக்கூடிய அகவிலைப்படி மாதத்துக்கு ரூ.105இல் இருந்து 210 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒன்றரைக் கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்தப் புதிய அகவிலைப்படி உயர்வானது 2021 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மத்திய அரசின் திட்டமிடப்பட்ட வேலைகளுக்கான ரெயில்வே சுரங்கம், எண்ணெய் வயல், முக்கிய துறைமுகங்கள் ஆகியவற்றின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் அல்லது மத்திய அரசால் நிறுவப்பட்ட கழகங்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதமும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 26 மே 2021