மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

வீடு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி!

வீடு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி!

தமிழகத்தில் வீடு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ள இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடையாள அட்டைகள் கேட்கப்படுகின்றன. ஆனால் அடையாள அட்டை இல்லாத வீடு இல்லாத மக்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவோ, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவோ முடியாத சூழ்நிலையில் உள்ளனர். தடுப்பூசி செலுத்தினால் தான் அவர்களின் உயிரைப் பாதுகாக்க முடியும். தொற்று பாதிக்கும் அபாயம் அதிகமுள்ள வீடில்லா மக்களைக் கணக்கெடுத்து, அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று(மே 26) நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், வீடு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான வழக்குகளுடன் விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்ற பரிந்துரைத்து, உத்தரவிட்டனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 26 மே 2021