}சந்திர கிரகணம்… இந்தியாவில் பார்க்க முடியுமா?

public

2019 ஜனவரி மாதத்துக்குப் பிறகு, இரண்டு வருடங்கள் கழித்து முழுமையான சந்திர கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. இது கடந்த ஆண்டு நிகழ்ந்ததைப் போல பகுதியாக இல்லாமல் முழுமையான சந்திர கிரகணமாக நிகழவிருக்கிறது.

இந்த ஆண்டு இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழவிருக்கின்றன. அதில் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. இந்த சந்திர கிரகணமானது இந்திய நேரப்படி இன்று பகல் 2.17 மணிக்குத் தோன்றி இரவு 7.19 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவித்திருக்கிறது நாசா.

இந்தியாவில் இந்த முழு சந்திர கிரகணம் ஒரு பகுதி அல்லது புறநிழல் சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும். அனைத்து பகுதிகளிலும் காண முடியாது. கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் அமெரிக்காவில் இருப்பவர்களால் மட்டுமே இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

இந்த சந்திர கிரகணத்தின்போது தெரியும் நிலவு Super Blood Moon எனவும் அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணம் நிகழும் நேரத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் என்பதால் அது Blood Moon என்று அழைக்கப்படுகிறது. நிலவின் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் புள்ளியை பெரிகீ (Perigee) என்றழைக்கின்றனர். இந்தப் புள்ளியில் நிலவு வரும்போது அது வழக்கத்தை விடக் கொஞ்சம் பெரிதாகவும், வெளிச்சமாகவும் இருக்கும்.

இப்படி நிலவு தோன்றுவதை Super Moon என்றழைக்கின்றனர். இந்த சந்திர கிரகணம் நிகழும் அந்த நேரத்தில் நிலவு பெரிகீ புள்ளியில் இருக்கும். இதனால் வழக்கத்தை விட 7.7 சதவிகிதம் பெரிதாகத் தெரியும். எனவேதான், இந்த சந்திர கிரகணத்தில் தோன்றும் நிலவை ‘Super Blood Moon’ என்றழைக்கின்றனர்.

தற்போது நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியவில்லை என்றாலும், அடுத்ததாக இந்த ஆண்டு நவம்பர் 19இல் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியாவிலிருந்து பார்க்க முடியும். ஆனால், அது முழுமையான சந்திர கிரகணம் இல்லை.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *