மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

குமரி வரை எதிரொலிக்கும் யாஸ் புயல்!

குமரி வரை எதிரொலிக்கும் யாஸ் புயல்!

யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரியில் பெய்த கன மழையால் விளைபயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறி வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்தது. இது அதி தீவிர புயலாக வலுப்பெற்று, இன்று காலையில் கரை கடக்கத் தொடங்கியது. யாஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புயல், மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே காலை 9 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது.

இதனால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாவட்டங்களில் கடுமையான காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள நியு டிகா பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

ஒடிசாவின் தம்ரா பகுதியில், குடியிருப்புகளில் கடல் நீர் புகுந்திருக்கிறது. மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 2 லட்சம் பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் கரையைக் கடக்கும் போது 185 கிமீ வரை காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்திலும் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்று வீசி வருகிறது.

குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கன மழையும் பெய்து வருகிறது. புயல் காற்றால் பேயன்குழியில் இருந்த 100ஆண்டு பழமையான ஆலமரம் சாய்ந்திருக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விளைபயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

நாகர்கோவில் நகர பகுதிகளில் தாழ்வான தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.

-பிரியா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 26 மே 2021