மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

உங்க ஏரியாவுக்கு வரும் காய்கறி வாகனங்களின் விவரம்!

உங்க ஏரியாவுக்கு வரும் காய்கறி வாகனங்களின் விவரம்!

சென்னையில் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்பவர்களின் விவரங்களை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் வெளியில் வருவதை தடுக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 200 வார்டுகளிலும், இரண்டாயிரம் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்த சந்தேகங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 94999 32899 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இருப்பினும், சென்னையின் சில பகுதிகளில் இந்த காய்கறி வாகனங்கள் வருவதில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் வாகனங்கள் மூலம் காய்கறி,பழங்கள் விற்பனை செய்பவர்களின் செல்போன் எண், பெயர் உள்ளிட்ட விவரங்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வோர்களின் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மக்களின் தேவையை கருத்தில் கொண்டு நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட் ஆகியவையும் விற்பனை செய்யப்படும்” என

தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 26 மே 2021