மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

விமானப் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும்!

விமானப் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும்!

விமானப் பயணிகள் எண்ணிக்கை இந்த (2021) ஆண்டு மேலும் குறையும் என்று முதலீட்டு தகவல் மற்றும் கடன் தர நிர்ணய முகமையான ‘இக்ரா’ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2020) கொரோனா தொற்று தாக்கத்தின் தொடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு விமான சேவை, மீண்டும் 2020 மே 25ஆம் தேதி தொடங்கியது. அதன் பிறகு சீராக அதிகரித்து வந்த உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை, 2021 பிப்ரவரியில் முந்தைய ஆண்டின் 64 சதவிகித அளவை எட்டியது.

ஆனால், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக, பல மாநில அரசுகள் புதிதாகக் கட்டுப்பாடுகளை விதித்தன. அதனால் மறுபடியும் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. இந்த மாதத்தின் 1 முதல் 16ஆம் தேதியை முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 56 சதவிகிதக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், முதலீட்டு தகவல் மற்றும் கடன் தர நிர்ணய முகமையான ‘இக்ரா’ நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை மேலும் சரியும். வருகிற 2023ஆம் நிதியாண்டுக்கு முன்பு அது கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்று கணித்துள்ளது.

‘உள்நாட்டில் விமானப் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை 2023ஆம் நிதியாண்டிலும், சர்வதேச விமானப் பயணிகள் எண்ணிக்கை 2024ஆம் நிதியாண்டிலும் எட்டும் என்று கருதுகிறோம்’ எனவும் ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

-ராஜ்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

புதன் 26 மே 2021