மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

தனியார் சிகிச்சை மையங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!

தனியார் சிகிச்சை மையங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!

தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று மட்டும் 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இருப்பினும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போதும், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கிறது.

கொரோனா பரவலை மேலும் கட்டுக்குள் கொண்டுவர சென்னை மாநகராட்சி, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் நெறிமுறைகளின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் எனக் கருதப்படும் நபர்கள் குறித்த தகவல்களை மாநகர நல அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், தனியார் மருத்துவமனைகள் அல்லாமல் தனியார் சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், அதுகுறித்த தகவல்களை மாநகராட்சிக்குத் தருவதில்லை.

அதனால், தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் அல்லது கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், உள்ளிட்ட விவரங்களை சென்னை மாநகராட்சிக்குத் தினமும் மெயில் அனுப்ப வேண்டும்.

அப்படி விவரங்களை தெரிவிக்கவில்லையென்றால், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 51-ன்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதைக் கண்காணிக்க பூச்சியியல் வல்லுநர்களை கொண்ட 15 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 26 மே 2021