மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

கிச்சன் கீர்த்தனா: வல்லாரை துவையல்

கிச்சன் கீர்த்தனா: வல்லாரை துவையல்

நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவாற்றலை மேம்படுத்தவும், நினைவுகளைத் தக்கவைக்கும் திறனை அதிகரிக்கவும் வல்லாரை சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். வல்லாரையில் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை இருப்பதால் மனதை அமைதியாகவும் பதற்றமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சைமர் நோய், அனிஸிட்டி பிரச்சினை, கவனக்குறைவு, அழற்சியைப் போக்க இந்த வல்லாரை துவையல் உதவும்.

என்ன தேவை?

ஆய்ந்த வல்லாரைக் கீரை - 2 கப்

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிய துண்டு

காய்ந்த மிளகாய் - 5

உப்பு - தேவையான அளவு

புளி - சிறிதளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். பிறகு கழுவிய கீரையைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், உப்பு, புளி, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: எள் துவையல்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 26 மே 2021