மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

ரிலாக்ஸ் டைம்: கிரீன் டானிக்!

ரிலாக்ஸ் டைம்: கிரீன் டானிக்!

நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதைவிட, நம் ஊரிலேயே விளையக்கூடிய, எளிதாகக் கிடைக்கும் சில அற்புத மூலிகை பானங்களை அன்றாடம் எடுத்துக்கொண்டாலே, நோயற்ற வாழ்வு நம் வசமாகும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த கிரீன் டானிக் அருந்துங்கள். எந்த நோயும் நம்மை அணுகாது.

எப்படிச் செய்வது?

துளசி இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்து 50 மில்லி அளவுக்குச் சாறு எடுக்கவும். அதேபோல, ஐந்து நெல்லிக்காயை விதை நீக்கி, பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். அமுக்கிரா (அஸ்வகந்தா என்றும் கூறுவர். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) கிழங்கைப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு டம்ளரில் அமுக்கிரா பொடி, துளசிச்சாறு, நெல்லிச்சாற்றை ஊற்றி, நன்கு கலக்கவும். இதை அப்படியே அருந்தலாம்.

சிறப்பு

துளசியில் உள்ள யூஜெனால் (Eugenol) என்ற ரசாயனம், வைரஸ் கிருமிக்கு எதிராகச் செயல்படக்கூடியது. அமுக்கிராவில் 150-க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள், ஊட்டச்சத்துகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது, மூளைக்கு நல்லது. குழந்தைகள் குடித்துவர, நினைவுத்திறன் பெருகும்..

குழந்தைகளுக்கு தினமும் அமுக்கிரா கிழங்குப் பொடியைச் சாப்பிடக் கொடுக்கலாம். பால், ஜூஸ் என ஏதாவது ஒன்றில் கலந்து கொடுக்கலாம்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 25 மே 2021