மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 மே 2021

கிச்சன் கீர்த்தனா: எள் துவையல்

கிச்சன் கீர்த்தனா: எள் துவையல்

எள் சாப்பிடுவதால், மாதவிடாயின்போது ரத்த வெளியேற்றம் அதிகமாகுமோ என்ற பயம் சில பெண்களுக்கு இருக்கும். இந்தத் துவையலில் சேர்க்கப்பட்டிருக்கும் தேங்காயும் உளுத்தம்பருப்பும் எள்ளின் உஷ்ணத்தன்மையைக் குறைக்கும் என்பதால், அந்த பயம் அவசியமில்லை. வயிற்றுப்புண், புளித்த ஏப்பப் பிரச்சினை உள்ளவர்கள் ஏதேனும் ஒரு கஞ்சி வகையோடு எள் துவையலைச் சேர்த்துக்கொண்டால், அதுவும் சரியாகும். எலும்பு மூட்டுப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கும், எலும்பை வலுவாக்குவதற்கும் உதவும் என்பதால், அனைவருமே எள் துவையலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

என்ன தேவை?

கறுப்பு எள் - கால் கப்

தேங்காய் துண்டுகள் - 4

காய்ந்த மிளகாய் - 4

கட்டிப் பெருங்காயம் - சிறு துண்டு

உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - சிறிதளவு

புளி - சிறிய கோலிக்குண்டு அளவு

எப்படிச் செய்வது?

எள்ளைச் சுத்தம் செய்து, வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, அதில் உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு சிறிது நேரம் வறுக்கவும். உளுத்தம்பருப்பு சிவந்ததும் தேங்காய் துண்டுகள், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஆறியதும், எள் மற்றும் தண்ணீர் (சிறிதளவு) சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுத்தால், எள் துவையல் ரெடி.

நேற்றைய ரெசிப்பி: பீர்க்கங்காய்த் தோல் துவையல்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

செவ்வாய் 25 மே 2021